வேகத்தடை வேண்டும்

Update: 2022-09-25 13:20 GMT

நாகை செல்லூர் சாலை கிழக்கு கடற்கரைசாலையில் இருந்து நகருக்கு வருவதற்கு முக்கிய சாலையாக உள்ளது. போக்குவரத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த சாலை என்பதால் தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் இந்த சாலையை புதியதாக அமைத்தனர். இந்த சாலையில் கல்லூரியும் உள்ளதால் மாணவ-மாணவிகள் இந்த வழியாக தான் சென்று வருகின்றனர். இந்த நிலையில் சாலையில் வாகனங்கள் வேகமாக சென்று வருகின்றன. இதனால் அந்த வழியாக சென்று வரும் பொதுமக்கள் மிகவும் அச்சத்துடன் சென்று வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த பகுதியில் வேகத்தடை அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், நாகப்பட்டினம்.

மேலும் செய்திகள்