கொடுமுடி அருகே சென்னசமுத்திரத்தில் சோளக்காளிபாளையம் செல்லும் நுழைவு பாலத்துக்கு முன்பு உள்ள பாதையின் நடுவே மின்கம்பம் ஒன்று உள்ளது. மேலும் இதை சுற்றி செடி. கொடிகள் வளா்ந்து காணப்படுகிறது. இந்த மின்கம்பம் மிக அருகிலேயே மின்மாற்றியும் அமைந்துள்ளது. இந்த வழியாக விவசாயத்திற்காக மாட்டு வண்டிகள் மற்றும் சரக்கு வாகனங்கள் சென்று வருவதால் போக்குவரத்துக்கு மிகவும் இடையூறாக உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக மின்கம்பத்தை அப்புறப்படுத்தி ரோட்டோரத்தில் நட நடவடிக்கை எடுக்க வேண்டும்.