ஈரோட்டில் இருந்து கரூர் செல்லும் மெயின் ரோட்டில் ஊஞ்சலூர் உள்ளது. இங்குள்ள பஸ் நிறுத்தத்தில் ரோடு மிகவும் வளைந்து செல்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் அடிக்கடி தடுமாறுகிறார்கள். எனவே விபத்துகள் ஏற்படுவதற்கு முன்பு நெடுஞ்சாலைத்துறையினர் பஸ்நிறுத்தத்தில் வேகத்தடை அமைப்பார்களா?