சென்னை அண்ணாநகர் மேற்கு திருமங்கலம் மெட்ரோ ரெயில் பஸ் நிறுத்தம் பொது மக்கள் பயன்பாட்டில் உள்ளது. இந்த பஸ் நிறுத்தத்தை மோட்டர் சைக்கிள் வாகன நிறுத்தமாக பலர் மாற்றி, ஆக்கிரமித்து வருகின்றனர். இதனால் பயணிகள் பஸ்சில் ஏற, இறங்க மிகவும் சிரமமாக உள்ளது. ஆக்கிரமிப்புகளை அகற்றி, அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை மேற்கொண்டு தீர்வு காண வேண்டும்.