சாலையோர ஆக்கிரமிப்புகள்
திருப்பூர் மங்கலம் ரோடு வேலம்பாளைம் செல்லும் வழியில் குமரன் கல்லூரி செல்லும் சாலையான இடுவம்பாளையத்தில் சாலையோரத்தில் சிலர் தங்களது கடைகள் முன்பு ஆக்கிரமிப்பு செய்து செட்டுகளை அமைத்துள்ளனர்.இதனால் கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகள் மற்றும் காலை,மாலை வேளைகளில் பணிக்கு செல்லும் தொழிலாளர்கள் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. இதனால் கல்லூரி மாணவ-மாணவிகள்,தொழிலாளர்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு கல்லூரிக்கும், பணிக்கும் செல்ல முடியவில்லை.மேலும் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்ைக எடுத்து ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
குமார், இடுவம்பாளையம்.
8870551078.