பழனி பஸ் நிலையம், சாலைகளில் மாடுகள் சுற்றித்திரிகின்றன. சாலையின் நடுவே மாடுகள் படுத்து கொள்வதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. மேலும் சாலையின் குறுக்காக செல்லும் மாடுகளால் இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கிக் கொள்கின்றனர். மாடுகளும் காயம் அடைகின்றன. எனவே மாடுகள் சாலையில் விடப்படுவதை தடுக்க வேண்டும்.