புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி தாலுகா காரையூர் சுற்றுவட்டார பகுதியான மேலத்தானியம், கீழத்தானியம், முள்ளிப்பட்டி, ஆலம்பட்டி, அரசமலை, நல்லூர், மறவாமதுரை, ஒலியமங்கலம், கூடலூர், கொன்னையம்பட்டி, இடையாத்தூர், எம். உசிலம்பட்டி, காரையூர் என பல்வேறு பகுதிகளில் வசிப்பவர்கள் இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம், அன்னவாசல் போலீஸ் நிலையம் உள்ளிட்ட அலுவலகங்களுக்கு செல்ல பொதுமக்கள் பஸ் வசதி இல்லாமல் சிரமப்பட்டு வருகின்றனர். இதேபோல மேற்கண்ட பகுதிகளில் இருந்து இலுப்பூர், புதுக்கோட்டைக்கு கல்லூரிகளுக்கு செல்ல மாணவ-மாணவிகள் இருசக்கர வாகனத்தில் சென்று வருகின்றன. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.