பஸ் நிலையம் இல்லாததால் போக்குவரத்து நெரிசல்

Update: 2022-08-17 14:41 GMT

வடமதுரை பேரூராட்சியில் பஸ் நிலையம் அமைக்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக கோரிக்கை எழுந்து வந்தது. இதையடுத்து கடந்த அ.தி.மு.க. ஆட்சியின் போது வடமதுரையில் பஸ் நிலையம் அமைக்க இந்துசமய அறநிலையத்துறையினரிடம் இருந்து வடமதுரை சவுந்தரராஜ பெருமாள் கோவில் இடத்தை கையகப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அதன்பின்னர் அந்த பணிகள் கிடப்பில் போடப்பட்டுவிட்டது. இதற்கிடையே பஸ் நிலையம் இல்லாததால் வடமதுரையில் காலை மற்றும் மாலை வேளைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே வடமதுரையில் பஸ் நிலையம் அமைக்கும் பணியை விரைந்து மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மேலும் செய்திகள்