திண்டுக்கல் மாவட்டம் எரியோடு மின்வாரிய அலுவலகம் அருகே 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். இங்குள்ள பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் வெளியூருக்கு படிக்க செல்கின்றனர். ஆனால் அந்த பகுதியில் உள்ள பஸ் நிறுத்தத்தில் பயணிகள் நிழற்குடை இல்லை. இதனால் கொளுத்தும் வெயிலில் கால்கடுக்க மாணவ-மாணவிகள் உள்பட அனைவரும் காத்திருக்கும் நிலை உள்ளது. எனவே பயணிகள் நிழற்குடை அமைக்க வேண்டும்.