அகஸ்தீஸ்வரத்தில் இருந்து கொட்டாரத்திற்கு செல்லும் சாலையின் இடையே நாகர்கோவில்-கன்னியாகுமரி ரெயில் தண்டவாளம் செல்கிறது. இந்த சாலையில் உள்ள ஒரு பாலத்தில் இருந்து ரெயில் தண்டவாளம் வரை சாலையில் இருபுறமும் பெரிய பள்ளம் உள்ளது. இதனால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருவதுடன் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, வாகன ஓட்டின் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பாலத்தில் இருந்து சாலையின் இருபுறமும் தடுப்பு சுவர் அமைப்பார்களா?.