நடைபாதை ஆக்கிரமிப்பு

Update: 2022-08-14 15:15 GMT

நடைபாதை ஆக்கிரமிப்பு

திருப்பூரில் ஏராளமான ஜவுளி சம்பந்தமான நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு தமிழ்நாடு மட்டுமின்றி பிற மாநிலங்களை சேர்ந்தவர்களும் வேலை செய்துவருகிறார்கள். இவர்கள் ஞாயிற்றுக்கிழமை அன்று நகரின் மையப்பகுதியான பழைய பஸ் நிலையம் பகுதிக்கு வந்து தங்களுக்கு தேவையானவற்றை வாங்கி செல்கிறார்கள். இதனால் அன்று அந்த பகுதியில் கூட்டம் அலைமோதும். அத்துடன் வளர்மதி பஸ் நிறுத்தம் பகுதியில் பாலத்தின் நடைபாைதயை ஆக்கிரமித்து சிலர் கடை நடத்துவதால் பாதசாரிகள் செல்ல சிரமமாக உள்ளது. மேலும் பஸ்கள் நின்று பயணிகளை இறக்கி ஏற்றுவதால் போக்குவரத்து நெருக்கடியும் விபத்து அபாயமும் உள்ளது. சம்பந்தப்பட்டவர்கள் இதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாகும்.

சுரேஷ், திருப்பூர் 98417 49158

மேலும் செய்திகள்

பஸ் வசதி