போக்குவரத்து நெரிசல்

Update: 2022-06-22 14:58 GMT
செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அருகே பெருமன்ட்டுநல்லூர் சந்திப்பில் தனியார் பள்ளி ஒன்று உள்ளது. பள்ளி அருகே இருக்கும் இந்த சாலையில் தினமும் காலை மற்றும் மாலை வேளையில் ஏராளமான வாகனங்கள் வந்து செல்வது வழக்கம். இதனால் தினமும் இந்த பகுதி போக்குவரத்து நெரிசல் மிகுந்த இடமாக மாறி வருகிறது. மேலும் இந்த பகுதியில் இருந்த பொக்குவரத்து சிக்னல் விளக்குகளும் வேலை செய்யாததால், வேலைக்கு செல்லும் மக்கள் இந்த பகுதியை கடப்பதற்கே பெரும் சிரமப்படுகிறார்கள். விரைவில் இந்த பிரச்சினைக்கு தீர்வு காணப்படுமா?

மேலும் செய்திகள்