சிவகங்கை மாவட்டம் புழுதிபட்டியிலிந்து குன்னத்தூர், உலகம்பட்டிக்கு இயக்கப்படும் பஸ் போதுமானதாக இல்லை. இதனால் இந்த வழியாக பயணிக்கும் மாணவர்கள், வேலைக்கு செல்வோர் நீண்ட நேரம் பஸ்சுக்காக காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் இவர்கள் வெவ்வேறு பஸ்களில் மாறி, மாறி சென்று வருகின்றனர். இதனால் காலவிரயம் ஏற்பட்டு வேலைக்கு செல்லும் நேரமும் பாதிக்கப்படுகின்றது. எனவே இந்த வழித்தடத்தில் கூடுதல் பஸ் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.