தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் நடந்து வருகின்றன. அதன்படி சாலை பணிகளும் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. இந்த சாலைகளின் ஓரத்தில் நடைபாதை, வாகனங்கள் நிறுத்துவதற்கான இடங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. ஆனாலும் அனைத்து வாகனங்களும் ரோட்டிலேயே நிறுத்தப்பட்டு போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது. அதே போன்று நடைபாதைகள் அனைத்தும் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளன. இதுதொடர்பாக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.