மாடவாக்கம் மற்றும் கூடுவாஞ்சேரியை இணைக்கும் தரைப்பாலம் கட்டப்பட்டு நீண்ட நாட்களாகியும் இன்னும் மக்கள் பயன்பாட்டிற்கு வரவில்லை. இதனால் அந்த இடத்தில் தண்ணீர் தேங்கி அசுத்தமாக காட்சியளிக்கிறது. தேங்கி இருக்கும் தண்ணீரில் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் தொற்றுக்கும் வழி வகுக்கிறது. எனவே இந்த பிரச்சினையை சரி செய்து பாலத்தை விரைவில் திறப்பதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.