வழிகாட்டி பலகையை மறைக்கும் மரக்கிளை

Update: 2022-08-11 15:12 GMT
பெங்களூருவில் ஆனேபாளையா பஸ் நிறுத்தம் உள்ளது. இந்த பஸ் நிறுத்தத்தை அந்த பகுதியில் உள்ள மக்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர். அந்த பஸ் நிறுத்தம் எதிரே வழிகாட்டி பலகை உள்ளது. அந்த பலகையை அருகில் உள்ள மரக்கிளை மறைக்கும் வகையில் உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அவதி அடைகின்றனர். எனவே போக்குவரத்து அதிகாரிகள் அந்த மரக்கிளையை அகற்றி, வழிகாட்டி பலகையை வெளிப்படையாக தெரியும் வண்ணம் மாற்ற ஏற்பாடு செய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்