போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டிகள்

Update: 2022-08-11 15:11 GMT
பெங்களூரு டிக்கென்சன் சாலையில் போக்குவரத்து சிக்னல் உள்ளது. இந்த சிக்னல் அருகே சாலையை கடக்கும் வாகன ஓட்டிகள் சிலர் ஒரு வழி சாலையில் இருந்து சிக்னல் பகுதிக்குள் நுழைகின்றனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. மேலும், அதிவேகமாக வரும் வாகன ஓட்டிகளால் விபத்தும் ஏற்படுகிறது. எனவே போக்குவரத்து போலீசார் அந்த பகுதி்யில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்