பராமரிப்பில்லாத பயணிகள் நிழற்குடை

Update: 2022-08-11 11:41 GMT
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா கொள்ளிடம் பகுதி கீழவாடி கிராமத்துக்கு தினமும் அரசு பஸ் வந்து செல்கிறது. இதனால் பயணிகள் நலன் கருதி பயணிகள் நிழற்குடை அமைக்கப்பட்டது. ஆனால் இந்த நிழற்குடை முறையான பராமரிப்பின்றி கட்டிடம் முழுவதும் சேதமடைந்து காணப்படுகிறது. குறிப்பாக பயணிகள் நிழற்குடையில் உள்ள இருக்கைகள் உடைந்து கிடக்கிறது. மேலும், பயணிகள் நிழற்குடைக்குள் மண்புற்றுகள் உருவாகி விஷப்பூச்சிகளின் கூடாரமாக மாறிவருகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள பயணிகள் நிழற்குடையை சீரமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?


மேலும் செய்திகள்

பஸ் வசதி
பஸ் வசதி