பெரம்பலூர் ரோவர் வளைவு அருகே ஒரு தேசிய மயமாக்கப்பட்ட வங்கி உள்ளது. இந்த வங்கியில் வாகன நிறுத்தும் இடம் வசதி இல்லாததால், அதன் வாடிக்கையாளர்கள் தங்களது இரு சக்கர வாகனங்களை போக்குவரத்துக்கு இடையூறாக சாலையில் நிறுத்தி விட்டு செல்கின்றனர். ஏற்கனவே அந்த சாலை போக்குவரத்து நிறைந்து காணப்படும் சூழ்நிலையில், தற்போது நிறுத்தப்படும் இரு சக்கர வாகனங்களால் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவதோடு விபத்துகளும் அரங்கேறி வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்த பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக இல்லாமல் இருப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.