நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வந்த தொடர் மழை காரணமாக மஞ்சூர்-கோவை சாலையில் சாலையோரம் புதர்கள் அதிகளவில் வளர்ந்துள்ளது. அவற்றின் கிளைகள் சாலை வரை நீண்டு வளர்ந்துள்ளதால், எதிரில் வரும் வாகனங்கள் தெரிவதில்லை. எனவே விபத்து அபாயம் இருப்பதால் அந்த புதர்களை வெட்டி அகற்ற நெடுஞ்சாலை துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.