சிவகங்கை மாவட்டம் எஸ்.புதூர் ஒன்றியத்தில் 21 ஊராட்சிகள் உள்ளன. இதில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக குறைந்த அளவு பஸ் மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது. இதனால் வெளியூர் செல்வோர் பெரும் சிரமம் அடைகின்றனர். வேளாண் பொருட்களை சந்தைக்கு கொண்டு செல்ல முடியாமலும் உள்ளனர். எனவே எஸ்.புதூர் கிராம பகுதிகளில் கூடுதல் பஸ் இயக்க வேண்டும்.