பஸ்கள் நின்று செல்ல வேண்டும்

Update: 2022-08-08 18:17 GMT

புதுச்சேரியில் இருந்து சென்னைக்கு கிழக்கு கடற்கரை சாலை வழியாக செல்லும் தமிழ்நாடு அரசு பஸ்கள் வாரத்தில் முதல் நாளான திங்கட்கிழமை காலை நேரத்தில் இந்திராகாந்தி சிக்னல், ராஜீவ் காந்தி சிக்னல், சிவாஜி சிலை, கோட்டக்குப்பம் ஆகிய பஸ் நிறுத்தத்தில் நிற்காமல் செல்கிறது. இதனால் வேலைக்கு செல்லும் ஆசிரியர்கள் மற்றும் மாணவ-மாணவிகள் தவிக்கின்றனர். மேற்கண்ட பஸ் நிறுத்தத்தில் பஸ்கள் நின்று செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மேலும் செய்திகள்