பெங்களூரு வீரன்னபாளையா பகுதியில் மேம்பாலம் உள்ளது. இந்த மேம்பாலத்தின் அருகில் உள்ள நிலத்தில் கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இதற்காக அந்த பகுதியில் இருந்த சுற்றுச்சுவர் இடிக்கப்பட்டு சாலையோரம் குவித்து வைக்கப்பட்டுள்ளது. இந்த கற்குவியல்களால் அந்த சாலையை வாகன ஓட்டிகள் பயன்படுத்த முடியாமல் தவித்து வருகின்றனர். மேலும், அந்த கற்கள் சாலையில் சிதறிவிழுவதால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.