பெங்களூருவில் சிவானந்தா சர்க்கிள் பகுதியில் ரெயில்வே மேம்பாலம் உள்ளது. குறுகலான இந்த மேம்பாலம் வழியாக கடந்த சில நாட்களாக ராட்சத வாகனங்கள் செல்கின்றன. இதனால் அந்த மேம்பாலம் சிதிலமடைந்துள்ளது. இதேநிலை நீடித்தால், மேம்பாலம் முற்றிலும் சேதமாகும். இந்த சாலையில் கனரக வாகனங்கள் ெசல்வதை தடுக்க போலீசார் நடவடிக்ைக எடுக்க முன்வருவார்களா?.