சிவகங்கை நகர் பகுதியில் சிலர் தங்கள் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களை வீதிகளில் நிறுத்தி செல்கின்றனர். வீட்டில் உள்ளவர்கள் வெளியே வர முடியாதவாறும், உள்ளே செல்ல முடியாதவாறும் நிறுத்திவிடுகின்றனர். இதனால் சாலையில் நடக்க, வாகனங்களில் பயணிக்க சிரமமாக உள்ளது. மேலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு நீண்ட நேர போராட்டத்திற்கு பின்னரே வாகனங்களை இயக்க முடிகிறது. இதனை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?