புதுச்சேரி-கடலூர் பிரதான சாலையில் ரெயில்வே கேட் அடைக்கப்படும் போது கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. பின்னர் கேட் திறக்கப்படும் போது வாகனங்கள் முண்டித்துக்கொண்டு தாறுமாறாக செல்கின்றன. குறிப்பாக பஸ்கள் விதிகளை மீறி மாற்றுப்பாதையில் சென்று முன்னால் செல்கின்றன. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதால் அங்கு போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும்.