புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் சுற்றுவட்டார கிராமங்களில் காலை நேரங்களில் விவசாயிகள் பூ மற்றும் காய்கறிகளை விற்பனை செய்வதற்காக கீரமங்கலத்தில் உள்ள கமிஷன் கடைகளுக்கு மோட்டார் சைக்கிள் மற்றும் சைக்கிள்களில் செல்வார்கள். அதே நேரத்தில் நூற்றுக்கணக்கான பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளும் சைக்கிள்களில் செல்வார்கள். காலை 9 மணிக்குள் ஏராளமானவர்கள் செல்லும் இவ்வழியாக அறந்தாங்கி பகுதியில் இருந்து பிளாஸ்டிக் குடங்களை சரக்கு ஆட்டோக்களின் வெளியில் தொங்கவிட்டு கொண்டு வேகமாக செல்வதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.