நடவடிக்கை எடுக்கப்படுமா?

Update: 2022-05-28 15:08 GMT
திருவள்ளூரில் உள்ள அரசு தலைமை மருத்துவமனைக்கு தினமும் நூற்றுக்கணக்கான பொது மக்கள் சிகிச்சைகாக வந்து செல்கிறார்கள். அந்த சாலை சென்னையிலிருந்து திருப்பதி செல்லும் நெடுஞ்சாலை என்பதால் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியாகும். இதனால் மருத்துவமனைக்கு வரும் முதியவர்கள் மற்றும் நோயாளிகள் போக்குவரத்து நெரிசல் மிகுந்த இந்த சாலையை கடக்கவே சிரமப்படுகிறார்கள். எனவே அரசு மருத்துவமனை நுழைவுவாயில் அருகே போக்குவரத்து காவலரை நியமித்து, பொது மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவேண்டும்.

மேலும் செய்திகள்