இருளில் மூழ்கும் பஸ் நிலையம்

Update: 2022-05-27 14:37 GMT
சென்னை பிராட்வே பஸ் நிலையம் இருளில் தத்தளித்து வருகிறது. இந்த பஸ்நிலையத்திற்குள் மிகவும் சொற்ப அளவிலேயே மின்விளக்குகள் எரிகின்றன. இந்த பஸ் நிலையத்திலிருந்து இரவில் பஸ் ஏறும் பெண்கள், மின் விளக்குகளின் பற்றாக்குறையால் இருளிலே நிற்கும் சூழல் ஏற்படுகிறது. மேலும் பஸ் நிலையத்திற்குள் கண்காணிப்பு கேமராக்களும் குறைந்த அளவில் தான் இருக்கிறது. எனவே பொதுமக்களின் நலன் கருதி அசம்பாவிதங்கள் ஏற்படும் முன்பு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்

பஸ் வசதி
பஸ் வசதி