சிவகங்கை மாவட்டத்தில் நகர் பகுதியில் அரசு சார்பில் ஏராளமான பஸ்கள் பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்படுகின்றன. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக மகளிருக்கான இலவச பஸ்கள் குறைந்த எண்ணிக்கையில் இயக்கப்படுகின்றன. . இதனால் வேலைக்கு செல்லும் பெண்கள் பஸ் கிடைக்காமல் சிரமப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மகளிருக்கான இலவச பஸ்களை கூடுதலாக இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.