கிருஷ்ணகிரியில் இருந்து ஓசூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் குந்தாரப்பள்ளி, குருபரப்பள்ளி, பந்தரபள்ளி, மேலுமலை, சூளகிரி உள்பட ஏராளமான கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் இருந்து ஓசூருக்கும், கிருஷ்ணகிரிக்கும் ஏராளமானோர் செல்கிறார்கள். காலை முதல் இரவு வரை பஸ் போக்குவரத்து எந்தவித பிரச்சினையும் இல்லாமல் உள்ளது. அதே நேரத்தில் இரவு 10 மணிக்கு மேல் காலை 5 மணி வரையில் இந்த வழியாக செல்லக்கூடிய விரைவு பஸ்கள் பெரும்பாலானவை நின்று செல்வதில்லை. குறிப்பாக தனியார் பஸ்கள் இரவு நேரங்களில் இல்லாததால் பயணிகள் மிகவும் சிரமப்படுகிறார்கள். எனவே இரவு நேரங்களில் இந்த ஊர்களில் பஸ்கள் நின்று செல்ல அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ரவி, சூளகிரி, கிருஷ்ணகிரி.
-ரவி, சூளகிரி, கிருஷ்ணகிரி.