சிவகங்கை மாவட்டம் சிவன்கோவில் தெரு பகுதியில் சிலர் வீடுகட்டுவதற்காக கொண்டுவரப்பட்ட கிராவல் மண்னை சாலையின் நடுவே கொட்டி வைக்கின்றனர். இதனால் சாலையில் பாதசாரிகள் நடக்க, வாகனங்களை இயக்க முடியாமல் பொதுமக்கள் அவதியடைகின்றனர். மேலும் வாகனஓட்டிகள் நிலை தடுமாறி கீழே விழுந்து காயமடையும் நிலை உள்ளது. எனவே சாலையில் போக்குவரத்திற்கு இடையூறாக மண் கொட்டுபவர்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.