அய்யலூரில் வாரந்தோறும் வியாழக்கிழமை அன்று ஆட்டுச் சந்தை நடைபெறுகிறது. சந்தைக்கு வரும் வியாபாரிகள் தங்கள் சரக்கு வாகனங்களை சந்தைக்கு வெளியே சர்வீஸ் சாலையில் நிறுத்துவதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்படுகிறது. அவசர காலத்தில் ஆம்புலன்ஸ் கூட செல்ல முடியாத அளவுக்கு போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே தேசிய நெடுஞ்சாலை துறையினர் வாகனங்களை நிறுத்துவதற்கு தனி இடம் ஒதுக்க வேண்டும்.