செஞ்சி திண்டிவனம் சாலையில் தற்காலிக பஸ் நிலையம் உள்ளது. இங்கு திருவண்ணாமலைக்கு செல்லும் அரசு பஸ்கள் நிற்காமல், செஞ்சி கூட்ரோட்டில் நின்று பயணிகளை ஏற்றி இறக்கி செல்கிறது. மேலும் அப்பகுதியில் நீண்ட நேரம் பஸ்கள் நிற்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதை தவிர்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.