கிருஷ்ணகிரியில் ஆவின் மேம்பாலம் சென்னை-சேலம்-பெங்களூரு சாலைகள் சந்திக்க கூடிய முக்கிய சாலையாகும். 24 மணி நேரமும் இந்த சாலைகள் பரபரப்பாக காணப்படுகின்றன. இந்த பகுதியில் சிக்னல் விளக்குகள் இல்லாததாலும், போக்குவரத்து போலீசார் பல நேரங்களில் இல்லாததாலும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் அவ்வபோது விபத்துகளும் நடக்கின்றன. எனவே இங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வண்ணம் சிக்னல் அமைக்கவோ, போலீசாரை நியமிக்கவோ அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.