அந்தியூர் அருகே சத்தி ரோட்டில் புதுமேட்டூர் பஸ் நிறுத்தம் அமைந்துள்ளது. இங்கு அந்தியூரில் இருந்து கோபி செல்லும் நகர பஸ்கள் நின்று செல்வதில்லை. இதனால் புதுமேட்டூருக்கு அடுத்துள்ள பழையமேட்டூர் பஸ் நிறுத்தத்தில் இறங்கி சுமார் ½ கிலோ மீட்டர் தூரம் நடந்து அடுத்த பஸ் நிறுத்தம் சென்று பஸ் ஏறும் நிலை ஏற்படுகிறது. இதனால் பயணிகள் அவதியடைகிறார்கள். எனவே அந்த வழியாக இயக்கப்படும் அனைத்து பஸ்களும் புதுமேட்டூர் பஸ் நிறுத்தத்தில் நின்று செல்வதற்கு ஈரோடு மாவட்ட போக்குவரத்து துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.