சிவகங்கை அரசு ஆஸ்பத்திரிக்கு காலை வேளைகளில் ஏராளமான நோயாளிகள் தினந்தோறும் வந்து செல்கின்றனர். இவர்கள் சிவகங்கை பஸ் நிலையத்தில் இருந்து ஆஸ்பத்திரி செல்ல ஷேர் ஆட்டோக்களில் அதிக கட்டணம் செலுத்தி பயணிக்கின்றனர். இதனால் நோயாளிகள் பாதிக்கப்படும் நிலை ஏற்படுகிறது. எனவே அரசு ஆஸ்பத்திரிக்கு செல்ல கூடுதல் பஸ் இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.