புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி தாலுகா, அணவயல் எல்.என்.புரம் பகுதியில் உள்ள பயணிகள் நிழற்குடையின் சுற்றுச்சுவர் வெடிப்பு ஏற்பட்டு பெயர்ந்து விழும் நிலையில் உள்ளது. மேலும் உள்ளேயும் ஆங்காங்கே விரிசல் ஏற்பட்டு ஆபத்தான நிலையில் காணப்படுகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.