தர்மபுரி நகரில் புறநகர் பஸ் நிலையம் மற்றும் டவுன் பஸ் நிலையம் ஆகியவை அருகருகே அமைந்துள்ளன. இந்த பஸ் நிலையங்களில் பஸ்கள் நுழையும் பகுதி மற்றும் வெளியேறும் பகுதி ஆகியவற்றையொட்டி இருசக்கர வாகனங்கள் அதிக அளவில் நிறுத்தப்படுகின்றன. இதனால் பஸ்கள் மற்றும் பஸ்களில் வந்து செல்லும் பொதுமக்களுக்கு அடிக்கடி இடையூறு ஏற்பட்டு வருகிறது. எனவே பஸ் நிலையங்களில் அதிக எண்ணிக்கையில் இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்படுவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.