கிடப்பில் போடப்பட்ட பணி

Update: 2023-09-10 12:21 GMT

அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியம் வெற்றியூர் பஞ்சாயத்து விரகாலூர் கிராமத்தில் சாலையில் பாலம் அமைப்பதற்காக பல மாதங்களுக்கு முன்பாக பள்ளம் தோண்டப்பட்டது. ஆனால் பாலம் அமைக்கப்படாமல் பணி கிடப்பில் போடப்பட்டு உள்ளது. இதனால் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்