சிதிலமடைந்த பாலம்

Update: 2023-09-10 12:19 GMT

அரியலூர் மாவட்டம் அரியலூர்- ஜெயங்கொண்டம் முதன்மை சாலையில் சின்ன நாகலூர் பாதைக்கு கிழக்கு புறத்தில் பாலக்கரை மேம்பாலம் அமைந்துள்ளது. இந்த பாலத்தின் வழியாக தினமும் அதிக அளவில் சிமெண்டு ஆலைகளுக்கு எண்ணற்ற கனரக வாகனங்கள் மற்றும் கூலி வேலைக்கு பொதுமக்கள் இருசக்கர சக்கர வாகனங்கள் மூலம் சென்று வருகின்றனர் . இந்தப் பாலம் பல ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டது. சில நாட்களாக பாலத்தின் தரை தளத்தில் ஆங்காங்கே கான்கிரீட் கலவைகள் பெயர்ந்து மிகப்பெரிய பள்ளங்கள் ஏற்பட்டுள்ளது. இதோடு அல்லாமல் தினமும் 24 மணி நேரமும் கனரக வாகனங்கள் செல்வதால் பாலத்தின் இரு புறமும் மற்றும் பாலத்தின் வளைவு பகுதியான தென்புறத்தில் விபத்துக்கள் ஏற்படுத்தும் விதமாக அதிகளவில் மண்கள் தேங்கி மேடாக உள்ளது. சில சமயங்களில் டிப்பர் லாரிகள் வேகமாக செல்லும்போது அங்குள்ள மண்கள் காற்றில் பறக்கிறது. இதனால் இவ்வழியே செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். சில சமயங்களில் விபத்துகள் ஏற்படும் சூழல் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்