பெரம்பலூர் நான்கு ரோட்டில் இருந்து அரியலூர் செல்லும் நெடுஞ்சாலை மேடு, பள்ளமாக காணப்படுவதினால் இந்த சாலையில் வேகமாக செல்லும் வாகன ஓட்டிகள் தனது கட்டுப்பாட்டை இழந்து தடுமாறும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த சாலையில் புதிதாக செல்லும் வாகன ஓட்டிகள் சாலை எந்த நிலையில் உள்ளது என்பதை அறியாமல் இரவு நேரத்தில் வேகமாக செல்லும்போது விபத்தில் சிக்கிக் கொள்கின்றனர். எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து இருந்த சாலையை சரி செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.