வேகத்தடை அமைக்கப்படுமா?

Update: 2023-09-06 13:49 GMT

கரூர் மாவட்டம், நொய்யல் குறுக்கு சாலையில் தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த வாகனங்கள் வேகமாக செல்வதினால் இப்பகுதி மக்கள் சாலையை கடக்க முடியாமல் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே பரமத்தி ரோடு சந்திப்பிற்கு கிழக்கேயும், வேலாயுதம்பாளையம் ரோடு சந்திப்பிற்கு மேற்கேயும் வேகத்தடை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்