ஏர்ஹாரன்கள் அகற்றப்படுமா?

Update: 2023-09-06 13:24 GMT
கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையத்தில் இருந்து பல்வேறு நகரங்களுக்கு தனியார் பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதில் பலவற்றில் அதிக ஒலி எழுப்ப கூடிய ஏர்ஹாரன்கள் பொருத்தப்பட்டுள்ளன. இது பயணிகளுக்கு மிகவும் இடையூறாக உள்ளது. பஸ் நிலையத்திற்குள்ளும் அதிக ஒலி எழுப்பும் ஏர்ஹாரன்களை தொடர்ந்து அடித்து இடையூறுகளை ஏற்படுத்துகிறார்கள்.
எனவே வட்டார போக்குவரத்து துறை அதிகாரிகள் இதை கவனித்து தனியார் பஸ்களில் அதிக ஒலி எழுப்ப கூடிய ஏர்ஹாரன்களை பறிமுதல் செய்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்