செஞ்சி பஸ் நிலையம் புதுப்பிக்கப்படுவதால் செஞ்சி திண்டிவனம் சாலையில் தற்காலிக பஸ் நிலையம் இயங்குகிறது. இதனால் அனைத்து பஸ்களும் அங்கு வந்து செல்ல வேண்டும் என்று உள்ளது. ஆனால் திருவண்ணாமலை ,சென்னை செல்லும் அரசு பஸ்கள் அனைத்தும் செஞ்சி கூட்டு ரோட்டிலேயே நிறுத்தி பயணிகளை ஏற்றி இறக்கி விடுகின்றனர். அது மட்டுமல்லாமல் நீண்ட நேரம் கூட்டுரோட்டிலேயே நிறுத்தப்படுவதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கிறது. எனவே போலீசார் தலையிட்டு செஞ்சி கூட்ரோட்டில் அரசு பஸ்கள் வெகுநேரம் நிற்பதை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.