பஸ் வசதி தேவை

Update: 2023-09-03 08:31 GMT

கல்குளம் தாலுகாவுக்கு உட்பட்ட வெள்ளிகோட்டில் இருந்து குழிக்கோட்டிற்கு செல்லும் சாலையில் சடையங்கால் ஊர் உள்ளது. இந்த ஊருக்கு சரியான பஸ் வசதி இல்லாததால் பள்ளி-கல்லூரி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் 1½ கிலோ மீட்டர் நடந்து சென்று வெள்ளிகோட்டில் இருந்து பஸ்சில் செல்லவேண்டி உள்ளது. இதனால், மாணவ-மாணவிகள், பொதுமக்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, பொதுமக்கள் நலன்கருதி பஸ்வசதி ஏற்படுத்திட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்