நாமக்கல் - சேந்தமங்கலம் சாலையில் ரெயில் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த சாலையில் ரெயில்வே மேம்பாலம் அமைக்கப்பட்டு இருந்தாலும், அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சென்று வர ஏதுவாக ரெயில் தண்டவாளத்திற்கு அடியில் தரைமட்ட பாலம் ஒன்றும் உள்ளது. இந்த பாலத்தில் மழை பெய்தால் தண்ணீர் தேங்கி விடுகிறது. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் அந்த பாலம் வழியாக செல்ல முடியாமல் சுற்றி செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது. எனவே இதை தடுக்க ரெயில்வே அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.