மொடக்குறிச்சியில் சிவகிரி-வெள்ளகோவில் செல்லும் மெயின் ரோட்டில் தாலுகா அலுவலக பஸ் நிறுத்தம் உள்ளது. ஆனால் இங்கு வெள்ளகோவில், சிவகிரி செல்லும் தனியார் பஸ்களும், அரசு பஸ்களும் நின்று செல்வதில்லை. இதனால் தமிழ்நாடு அரசு இ-சேவை மையத்துக்கு வரும் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். உடனே தாலுகா அலுவலக பஸ் நிறுத்தத்தில் தனியார் பஸ்களும், அரசு விரைவு பஸ்களும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்கப்படுமா?