வாகன ஓட்டிகள் அவதி

Update: 2023-08-30 12:53 GMT
பெரம்பலூர் மாவட்டம் நமையூர் கிராமத்தில் வசந்த் நகர் பகுதியில் பகல் மற்றும் இரவு நேரங்களில் தெரு நாய்கள் சுற்றித்திரிகிறது. இந்த நாய்கள் மோட்டார் சைக்கிளில் செல்வோர் பின்னால் துரத்தி சென்று கடிக்க வருகிறது. இதனால் மோட்டார் சைக்கிளில் செல்வோர் கீழே விழுந்து படுகாயம் அடைந்து வருகின்றனர். மேலும் பெண்கள், முதியவர்கள் சாலையில் நடக்க முடியவில்லை. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனா். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கொள்கிறோம்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி
பஸ் வசதி