முக்கூடல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இரவு பணியில் டாக்டர் நியமிக்கப்படவில்லை. மேலும் அங்கு 108 ஆம்புலன்ஸ் வசதியும் இல்லை. இதனால் இரவில் அவசர சிகிச்சைக்கு செல்கிறவர்களை நெல்லைக்கு செல்லுமாறு அறிவுறுத்துகின்றனர். இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே அங்கு இரவுநேர டாக்டரை நியமித்து, ஆம்புலன்ஸ் வசதியும் ஏற்படு்த்த அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.